அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தன் தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை, படம் இயக்குவதில்தான் ஆர்வம் என்று தீவிரமாக வெப்சீரிஸ்களுக்குக் கதை எழுதுவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.
இந்நிலையில் ஷாருக் கான் மற்றும் ஆர்யன் கான் இருவரும் இணைந்து ‘D’YAVOL X’ என்ற விலையுயர்ந்த ஆடை தயாரிப்புக் கம்பெனியின் விளப்பரத்தில் நடித்துள்ளனர். இதன் புகைப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30-ம் தேதி) வெளியாகியிருந்தது. இதை ஷாருக் கான் மற்றும் ஆர்யன் கான் தங்களின் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இவை சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தன. இதையடுத்து அவர்கள் விளம்பரத்தில் அணிந்திருந்த 24 லட்சம் மதிப்புள்ள ஜாக்கெட் மற்றும் 24,000 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்கள் ஒரே நாளில் விற்பனையாகித் தீர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. ஆர்யன் கான் நடித்த முதல் விளம்பரமே இவ்வளவு வரவேற்ப்பைப் பெற்றிருந்தாலும் ‘இந்த ஆடைகளை கிட்னியை விற்றுத்தான் வாங்க வேண்டும்’ எனப் பலரும் இதுகுறித்து ட்ரோல் செய்துவருகின்றனர்.