* சென்னையில் சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பு முடித்தவர். எத்திராஜ் கல்லூரியில் இரண்டே வருடங்கள் மட்டும் பி.பி.ஏ., படித்தார். அதன்பின், சினிமா என்ட்ரி. சினிமாவை அடுத்து ஒரு காதல் என்றால், அது உணவின் மீதுதான். செம foodie. சாப்பாட்டு ப்ரியை. அவர் மட்டுமல்ல, அவரின் நட்பு வட்டமும் உணவுப்ரியர்கள்தான். பயணங்களின் போது, அந்தந்த நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுவது த்ரிஷாவுக்கு பிடித்தமான ஒன்று. இதுவரை வாங்கிய விருதுகள், ஷீல்டுகள் அத்தனையையும் தன் வீட்டு வரவேற்பறையில் அழகுற அடுக்கி வைத்திருக்கிறார். அந்த ஹாலில் தான், இயக்குநர்களிடம் கதைகள் கேட்கிறார்.
* ‘மௌனம் பேசியதே’வில் ஆரம்பித்து ‘லியோ’ வரை 21 வருடங்களாக கதாநாயகியாக கோலோச்சும் த்ரிஷாவிடம், அவரது திரைப் பயணத்தைப் பற்றி பேசினால், ”மத்தவங்க சொல்லும் போதுதான், இவ்ளோ வருஷம் ஆகிடுச்சான்னு தோணும். மத்தபடி, நாம பண்ற வேலையை ரசிச்சு, பிடிச்சுப் போய் செய்தாலே போதும், நமக்கு நேரம் போறதே தெரியாது” என்பார்.
* வாயில்லாத ஜீவன்களின் மீது பெருங்கருணை காட்டுபவர். இப்பவும் அவரது வீடு இருக்கும் தெருவில் உள்ள நாய்களுக்கு ரிலாக்ஸ் ஸ்ரிஷாவின் வீடுதான். த்ரிஷா, படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டால், அவற்றை த்ரிஷாவின் அம்மா உமா தான் பராமரித்து வருகிறார்.
* த்ரிஷா இப்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ‘ரோடு’. ஹீரோயின் சென்ட்ரிக் படம். அதன் படப்பிடிப்பில் இயக்குநர் அருண், த்ரிஷாவிற்கு ‘கார்ஜியஸ் குயின்’ அல்லது ‘சவுத் குயின்’ என டைட்டிலில் த்ரிஷாவிற்கு பட்டம் கொடுக்க விரும்பியிருக்கிறார். இதுபற்றி த்ரிஷாவிடம் அவர் அனுமதி கேட்ட போது, த்ரிஷா சொன்னது இது. ”`பட்டம் கொடுக்கறதை ரசிகர்கள், மக்கள் பார்த்துப்பாங்க. ஃபிலிம் மேக்கர்ஸ் அதைப் பண்ணக்கூடாது. அப்படிச் செய்தால் படத்தின் தரம் பாதிக்கும்” என்ற த்ரிஷா, ”த்ரிஷா என்ற பெயரே போதும். எதிர்காலத்துலேயும் யாராவது பட்டம் கொடுத்தால்கூட அதை ஏத்துக்க மாட்டேன்” என்றும் கறாராக சொல்லிவிட்டார்.
* த்ரிஷாவின் கரியரில் ‘ஆய்த எழுத்து’ மறக்க முடியாத படம். ‘கில்லி’ முடித்த கையோடு மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’வில் கமிட் ஆனார். நடுக்கடலில் படப்பிடிப்பு. அப்போது த்ரிஷாவிற்கு நீச்சல் தெரியது. (அதன்பின், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் என சாகச பெண் ஆனார் அது வேற கதை). திடீரென த்ரிஷாவை நடுக்கடலில் தூக்கி வீசி விட்டார்கள். அதை த்ரிஷா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘என்ன மனுஷன் இவரு.. இப்படி பண்ணிட்டாரே.. இனிமே இவர் படத்துல நடிக்கக் கூடாது’ என த்ரிஷா மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த அதிசயம் நடந்தது. அந்த காட்சியை விளக்கிக் கொண்டிருந்த மணிரத்னமும் சட்டென கடலில் குதித்துவிட்டார். அவருக்கும் நீச்சல் தெரியாது என்பதும், அவரது சின்ஸியரிட்டி த்ரிஷாவிற்கு பின்னர் தெரிந்து அதிசயத்துப் போனார். அதன்பின் மணிரத்னத்தின் தீவிர ரசிகையாகவே மாறிவிட்டார் த்ரிஷ்.