சிவகார்த்திகேயன் ரசிகர்கள அடுத்து பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் மாவீரன். மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதத்திற்கு மாற்றப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வர இருப்பதால் தான் மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இது படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.