தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி பொறுப்பேற்றுள்ளார்

தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய அங்கமான FEFSI, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திரு ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையில் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் FEFSI-யின் ஊழியர்களின் நலனுக்காக அவர் எடுத்த பல முயற்சிகள் நம் பாராட்டுக்குரியவை.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கங்களுடன் இணக்கமாக பல வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். 2022-ல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் FEFSI-க்கும் ஏற்பட்ட புதிய சம்பளங்களின் ஒப்பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள்.

அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் ஆற்றல், ஆளுமை மற்றும் பல திறன்கள் கொண்ட திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள் FEFSI-யின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

திரு. ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து பயணிப்பதில் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்,

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,

பாரதிராஜா தலைவராக உள்ளார் மற்றும் T.G. தியாகராஜன், துணை தலைவராக உள்ளார், மேலும் T.சிவா, பொது செயலாளராக பொறுப்பில் உள்ளனர்.