“கப்ஜா” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

SSE & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா” விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

இயக்குநர், தயாரிப்பாளர் R.சந்துரு பேசியதாவது..,

“சிவராத்திரி தினத்தில் இந்த பாடலை, தமிழ்நாடு போன்ற ஒரு கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உங்கள் முன் வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களது அன்பும், ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை. இந்த திரைப்படம் எனது மூன்று வருட கால உழைப்பு. இந்தப் படத்தை ஒரு சவாலாக எடுத்து, ஒரு குழுவாக அர்ப்பணிப்புடன் இயங்கி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதையின் ராணி ஸ்ரேயா மேடம் தான். உபேந்திரா, கிச்சா சுதீப் உடைய கதாபாத்திரம் உங்களை ரசிக்க வைக்கும். வரும் மார்ச் 18 கப்ஜா வெளியாகவிருக்கிறது, அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நடிகை ஸ்ரேயா சரண் கூறியதாவது..,
தமிழ் சினிமா எப்பொழுதும் எனக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்து இருக்கிறது. இந்த படத்தின் கதையைக் கூறிய போது, நான் பிரமித்துப் போனேன். இந்த படக்குழு என்னை அரவணைப்புடன் கவனித்துக் கொண்டார்கள். பல சிக்கல்களைத் தாண்டி, நினைத்ததைத் தடங்கல் இல்லாமல் படமாகப் படக்குழு மாற்றியுள்ளனர். அற்புதமான ஒளிப்பதிவு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த பாடல் ரசிகர்களுக்கு எங்களது சிவராத்திரி பரிசு. படமும் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் பேசியதாவது..

கப்ஜா படத்தினை மூன்று ஆண்டுகளாக இயக்குநர் கடின உழைப்பைக் கொடுத்து உருவாக்கினார். இது ஒரு பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. கிச்சா சுதீப், உபேந்திரா, ஸ்ரேயா சரண் போன்ற நடிகர்கள் இருக்கும் இந்த படத்தில் இணைந்து இருப்பதே எனக்கு மகிழ்ச்சி. கேஜிஎஃப் போன்று இந்த படம் இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த படம் கேஜிஎஃப் படத்தைத் தாண்டி இருக்கும். கலையமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்திலும் இது நேர்த்தியான படமாக இருக்கிறது. இந்த படத்திற்கு உங்களது ஆதரவைத் தாருங்கள் .

நடிகர்கள்

உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண்

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் – SSE & Invenio Origin
தயாரிப்பு – R.சந்துரு
இணை தயாரிப்பு – அலங்கார் பாண்டியன்
இயக்கம் – R.சந்துரு
ஒளிப்பதிவு – A. J. ஷெட்டி
எடிட்டிங் – தீபு S. குமார்
இசை – ரவி பஸ்ருர்