கல்லூரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் பிரைம் வீடியோவின் புதிய தமிழ் தொடரான “எங்க ஹாஸ்டல்”

மிகவும் அதிகளவில் விரும்பப்பட்ட  இளைஞர்களின்  பிரபலமான நகைச்சுவை ஹிந்தி தொடரான ஹாஸ்டல் டேஸின் தமிழ் பதிப்பான எங்க ஹாஸ்டல் தொடரின் வெளியீட்டை பிரைம் வீடியோ சமீபத்தில் அறிவித்தது. TVF ஆல் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில், மாணவர்கள் தங்களின் அடையாளம், நட்பு, காதல், வாழ்க்கை மற்றும் கல்வி போன்ற பல்வேறு வாழ்க்கை போராட்டங்களை எதிர்கொண்டு போராடிவரும் வாழ்க்கையினூடே அதுதொடர்பான வேடிக்கையான சூழ்நிலைகளை காட்சிப்படுத்தியிருக்கிறது. பிரைம் வீடியோ தொடர் வெளியிடப்படும் நாள் நெருங்கி வரும் இந்த வேளையில் இதன் ட்ரெய்லர் வெளியீடு,  பார்வையாளர்களின் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எங்க ஹாஸ்டலின் விசித்திரமான மற்றும் உற்சாகமளிக்கும் பைத்தியக்காரத்தனமான ரசிக்கத்தக்க கொண்டாட்டங்களில் ஒரு சிலவற்றை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

அவினாஷ் ரமேஷ் ஏற்றிருக்கும் சித்தப்பு என்ற பாத்திரம் ஒரு , குறும்புத்தனமான, கவலையற்ற அடக்குமுறையையாளர் என்றாலும் கூட அவரிடம் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. வயதில் மூத்தவர், ஆனால் புதிய மாணவர்களின் அதே வகுப்பில் பயின்றுவருபவர், அவரது குறும்புத்தனங்கள் மற்றும் அதிகாரம் செலுத்தும் நடத்தை காரணமாக, பெரும்பாலான மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் விரும்பப்படாத ஒருவராக சித்தப்பு இருக்கிறார்.மேலும் எதிர்பாரா ஒரு சில நிகழ்வுகளின் மூலம் சித்தாப்பு ஹாஸ்டலில் மற்றவர்களோடு இணைந்து  பழகுவதற்கு ஒரு சிறு வாய்ப்பை கண்டுபிடித்து கைவசப்படுத்திக் கொண்டார். .

பிரைம் வீடியோ இந்தத் தொடரில் துடுக்குத் தனமான ஆனாலும் ஒரு, அப்பாவியான  அஜய் பாத்திரத்தில் தோன்றும் சச்சின் நாச்சியப்பன்,  தனது சிறுவயது மயக்கத்தில் சித்தாப்புவிடம் சிக்கிக் கொள்கிறார்,  ஆனால் இறுதியில் மாணவர்கள் மத்தியில்  மிக முக்கியமானவராக உருவெடுக்கிறார். .

சம்யுக்தா விஸ்வநாதன் ஏற்று நடித்த, அந்தக் கல்லூரியில் படிக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரே மாணவியான  அஹானா பாத்திரத்தில் சம்யுக்தா விஸ்வநாதன் தோன்றுகிறார், இது அவரை மாணவர்கள் மத்தியில் பிரபலமாக்கி நடுநாயகமாகத் திகழச்செய்கிறது குறிப்பாக அவரது அழகு மற்றும் புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவருகிறார்.

சம்யுக்தா விஸ்வநாதன் ஏற்று நடித்த, சரண்யா ரவிச்சந்திரன் தோன்றும் ராஜா பாத்திரம் ஒரு இனிமையான, அப்பாவியான தமிழ்ப் பெண், தொடக்கத்தில் அவர் பயந்த சுபாவம் கொண்டவராகவும் மற்றும் மற்றவர்களால் கேலி செய்யப்படுபவராகவும் இருந்த போதிலும் இறுதியில் எந்த ஒரு சூழ்நிலையையும் எளிதாக கையாளுபவராக அனைவரையும் கவர்ந்திழுக்கும் தைரியமான தனித்தன்மை வாய்ந்த ஒரு நபராக உருவெடுக்கிறார்.

செந்தில் பாத்திரத்தில் கௌதம் ராஜ் நடித்துள்ளார், அவரது உதவும் மற்றும் பரிவோடு பழகும் குணம் ஆகியவற்றால் பெரும்பாலானோர் அவரது நட்பு வட்டாரத்தில் இருக்கிறார்கள். தங்களுக்கு வழிகாட்டவும், பாடக்குறிப்புகளைத்தந்து கற்ப்பிப்பதற்கும் உதவிகள் வேண்டி ஹாஸ்டலில் உள்ள ஒவ்வொருவரும் நட்பு பாராட்டும் அன்புள்ளம்  கொண்ட அவரை  நாடி வருகிறார்கள்.

செல்வாக்கு மிக்க தந்தையின் மகனான டிராவிட் செல்வம், ஒரு தொழில்முனைவோராக விரும்பும் பாண்டியன் என்ற ஜெய வீர பாண்டியனாக நடித்துள்ளார், பகட்டான ஜொலிக்கும் அவரது ஆடை அலங்காரத்திற்காக கேலியும் கிண்டலும் செய்யப்படும் அவர், ஒரு முக்கியமான நண்பர்குழாமில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு நெருக்கமான நண்பர்கள் குழுவை உருவாக்குகிறான்.