‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் ‘துணிவு’ திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.

இதன் பிறகு அவர் பேசுகையில், ” முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.

இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள நாயகன் அஜித் குமார், இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் பட குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அத்துடன் ‘துணிவு’ படத்திற்கு அபிரிமிதமான ஆதரவை வாங்கியதற்காக‌ கேரள பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் ‘துணிவு: திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய அண்மைய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleதிருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!
Next articleபிரத்யேக ஸ்டைலில் ஆடை அணிந்ததற்காக பாராட்டுகளை குவிக்கும் ராம் சரண்