ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்து வருகிறது. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும் கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.

May be an image of 2 people and text

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் ட்ராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் ட்ராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தங்களின் கடின உழைப்பு மற்றும் கொடுத்த முயற்சிகள் அனைத்தும் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருகிறது என்பதைக் கண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

Previous article“கட்டில்” திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!
Next articleதிரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்