தென்னிந்தியா எப்போதுமே VFX-ல் வரக்கூடிய மிகப் பிரம்மாண்டமான எண்டர்டெயினர் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தவறுவதில்லை. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் காட்சிகள் சினிமா சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவில் பல இடங்களில் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் விநியோகஸ்தர்கள் மற்றும் எக்ஸிபிட்டர்ஸ் (exhibitors) அனைவரது கவனமும் படத்தின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வசூலின் மீதே உள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்புத் தொடங்கிய இந்தப் படத்தின் முன்பதிவுகள் எதிர்பார்த்ததை விடவும் குறிப்பாக தெற்கில் நன்றாகவே உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் தங்களுடைய மாநிலங்களில் ‘அவதார் 2’ படத்தை வெளியிடுவதற்காக 100-150 கோடி ரூபாய் பணத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். இன்னும் இது குறித்தான உறுதியான முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும் ‘அவதார் 2’ படத்தின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அதிகமான எதிர்பார்ப்பும் அவர்கள் காட்டும் ஆர்வமுமே இந்த முடிவை விநியோகஸ்தர்களை எடுக்க வைத்துள்ளது.
’அவதார்2’ திரைப்படம் டிசம்பர் 16ம் தேதி வெளியாவதை முன்னிட்டு தெலுங்கு விநியோகஸ்தர்கள் தங்களது சொந்தத் திரையரங்கத் திரைகளையே இந்தப் படத்திற்கு ஒதுக்க முன்வந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் மலையாள விநியோகதஸ்தர்களும் இந்தப் படத்தைப் பெறுவதற்காக மிகப் பெரிய விலைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.