“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம் !!

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” திரை விமர்சனம் !!

அறிமுகம் முன்னணி இயக்குநர் AL விஜய் உருவாக்கத்தில் பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ள இணைய தொடர் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” முழுக்க நடனத்தை பின்னணி கதைகளமாக கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

நடனத்தை வைத்து உருவாகியிருக்கும் இந்த தொடர் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்.

நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் சில டீனேஜ் சிறுவர்கள் நடன போட்டியில் கலந்து கொண்டு சாதிப்பது தான் கதை.

AL விஜய் இயக்கத்தில் பிரபு தேவா மற்றும் தித்யா நடிப்பில் ஏற்கனவே படமாக வந்த கதைதான். கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து முழு நீள தொடராக மாற்றியிருக்கிறார்கள்.

வறுமையின் பிடியில் பலவித வாழ்க்கை சிக்கலில் குடும்பங்களில் வாழும் இளம் சிறுவர்கள் தங்கள் ஆசை லட்சியமான நடனத்தில் சாதிக்க துடிக்கிறார்கள் அதற்கு வரும் தடைகளை தகர்த்தெறிந்தார்களா ? ஜெயித்தார்களா என்பது தான் கதை.

தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே மூவரின் நடிப்பு நன்றாக வந்துள்ளது உண்மையில் அவர்களின் நடிப்பை விட நடன திறமை அட்டகாசமாக இருக்கிறது. தொடரை காப்பாற்றுவது தான் அது தான்.

தொடரில் வரும் நடனகாட்சிகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். இதுவரை நாம் பார்த்திருக்கும் டான்ஸ் நம்பர்களை மறக்கடிக்கிறது. தித்யா நடனம் எல்லாம் நம்ப முடியாதது.

தொடரின் திரைக்கதை மிக வறட்சியாக இருக்கிறது. நடனம் தவிர வரும் காட்சிகள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. துணை கதாப்பாத்திரங்களில் வரும் நடிகர்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

நாகேந்திர பிரசாத் ப்ளாஷ்பேக் பெரிதாக கவரவில்லை. திரைகதையில் கவனம் கூட்டியிருந்தால் மிக சிறப்பான தொடராக வந்திருக்கும். ஆனாலும் நடனம உங்களுக்கு பிடிக்குமெனில் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.