‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ,
‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது ! ‘வெர்டிஜ்’ (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Ponniyin Selvan (PS1) Movie Release on Sept 30th Poster

சென்னை (செப்டம்பர் 16, 2022): டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ ( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.

ஃபால் தொடரின் கதையானது, தென்னிந்தியாவின் கோயம்புத்தூர் நகரை மையமாக வைத்து, ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான வெப் சீரிஸாக எடுக்கப்பட்டுள்ளது. திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் அவள் தேடுகிறாள், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து அதனை கண்டுபிடிக்க முயல்கிறாள்.

‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.

‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற “வெர்டிஜ்” எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ தழுவலாகும்.

Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous article“விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!
Next articleநடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்