“13” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“13” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “13”. அறிமுக இயக்குநர் K விவேக் இயக்கத்தில், ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்ததனர்.

தயாரிப்பாளர் S நந்தகோபால் கூறியதாவது…..

“96 படத்திற்குப்பிறகு எனது அடுத்த தயாரிப்பு தான் “13” திரைப்படம். 96 படம் ஆரம்பிக்கும்போது இருந்த அதே மகிழ்ச்சியுடன் இதை ஆரம்பித்துள்ளேன். அறிமுக இயக்குனர் விவேக் கதை சொன்ன விதமும், கதையமைப்பும் இந்த படத்தை என்னை தயாரிக்க வைத்தது. கொரோனா காலத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். ரோமியோ-ஜூலியட் மற்றும் 96 போல், 13 திரைப்படமும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு முழு அர்பணிப்பு அளித்த ஜீவி பிரகாஷுக்கு நன்றி. நான் நடிகர்களில் ஜீவியை மட்டுமே இந்த படத்திற்காக அணுகினேன். படத்தின் கதையை கேட்ட ஜீவி, உடனே இந்த படத்தினை செய்ய ஒத்துகொண்டார். 96க்கு முன்னரே நாங்கள் பல கதைகளை விவாதித்தோம், அது அவருக்கு பிடிக்கவில்லை. இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துபோனது. மூவேந்தர் தான் இந்த படத்தின் கேமரா மேன், சித்துகுமார் இந்த படத்தில் சிறப்பான இசையை தந்துள்ளார். படத்தின் படதொகுப்பாளராக காஸ்ட்ரோ பணியாற்றுகிறார். சந்தோஷ் என்ற நடன இயக்குனரும், ராம்குமார் என்ற சண்டை இயக்குனரும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகி கதையை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்து, மூன்று பேரை இந்த படத்தில் பணியாற்ற வைத்துள்ளோம், அவர்கள் சிறப்பான பணியை செய்துள்ளனர். இந்த படத்தில் கௌதம் மேனன் வில்லன் கிடையாது, ஆனால் கதையை தாங்கி பிடிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவருக்கு நன்றி கூறிகொள்கிறேன். இந்த படம் நன்றாக வரும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.

படதொகுப்பாளர் காஸ்ட்ரோ கூறியதாவது

“தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் நன்றி. படம் கிட்டதட்ட முடிந்துவிட்டது, படம் நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் நன்றி.”

கேமராமேன் மூவேந்தர் கூறியதாவது…
“ஒரு நீண்ட நாள் கனவு இன்று துவங்கியுள்ளது. ஜீவி சார், தயாரிப்பாளர் சார், இயக்குனர் சாருக்கு நன்றி. “

நடிகர் ஆதித்யா கதிர் கூறியதாவது….
“இந்த படத்தில் நான் கடைசியாக தான் உள்ளே வந்தேன். ஜீவி சார் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. காட்டுக்கு நடுவில் படபிடிப்பு நடந்தது. அது பெரிய சவாலாக இருந்தது. கதாநாயகி மூவரும் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளனர். படத்தொகுப்பாளர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்த படம் எங்கள் அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கூட்டிசெல்லும். நன்றி”

சண்டை இயக்குனர் ராம்குமார் கூறியதாவது…
“இந்த படம் விஷுயல் டிரீட் ஆக இருக்கும். தயாரிப்பாளர், இயக்குனர், ஜீவி சார் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.”

 

நடிகை ஆதியா கூறியதாவது…
“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தில் ஜீவி சார் உடன் பணியாற்றியது ஒரு புது அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் என்னுடன் நடித்த இரு கதாநாயகிகளும் எனக்கு இந்த படத்தில் உறுதுணையாக இருந்தார்கள். கேமராமேன் உடைய விஷுயல் நன்றாக வந்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.”

நடிகை பவ்யா கூறியதாவது….
“எனது திறமையை வெளிகாட்ட வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தில் ஜீவி சார், ஆதியா, ஐஸ்வர்யா உடன் பணியாற்றியது மனதிற்கு நெருக்கமாக இருந்தது. இந்த 13 படம் எல்லோருக்கும் லக்கியாக இருக்கும்.”

நடிகை ஐஸ்வர்யா கூறியதாவது..
“இயக்குனர் விவேக் அவர்களுக்கு நன்றி. எங்களை போன்ற புதுமுகங்களை படத்தில் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் நந்த கோபால் சாருக்கு நன்றி. ஜீவி சார் எங்களை சரிசமமாக நடத்தினார். இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் கடினமான உழைப்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் பணியாற்றியதற்கு சந்தோஷப்படுகிறேன்.”

இசையமைப்பாளர் சித்துகுமார் கூறியதாவது….
“மெட்ராஸ் ஸ்டூடியோஸ் நந்தகோபால் சாருக்கு நன்றி. ஜீவி சார் உடன் நான் இணையும் மூன்றாவது படம், அது தான் இந்த படம் எனக்கு நெருக்கமான ஒன்றாக காரணம். இந்த படம் ஒரு சிறந்த ஹாரர் திரில்லராக இருக்கும். இயக்குனர் விவேக் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. படத்திற்கான முழு உழைப்பை வழங்க எல்லோரும் இணைந்து பணியாற்றினோம்.”

ஜீவி பிரகாஷ் குமார் கூறியதாவது….
“ NTR உடைய 100 ஆவது பிறந்தநாள் அன்று இந்த படத்தின் முதல் பார்வையை வெளியிடுவது மகிழ்ச்சி. முதலில் நாங்கள் வெற்றிமாறன் உடைய கதையில் ஒரு படம் எடுக்க, நானும் தயாரிப்பாளரும் விவாதித்தோம். ஆனால் அது நிகழவில்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்காக என்னை அழைத்தார். ஹாரர் படம் என்று சொன்னபோது, நான் வேண்டாம் என்று தான் முதலில் நினைத்தேன். இந்த படத்தின் கதை கேட்ட பிறகு, நாம் எப்பொழுதும் பார்க்குக் ஹாரர் படமாக இல்லாமல், புதிதாக இருந்தது. இந்த படம் நல்ல தொழில்நுட்ப கலைஞர்களுடன், புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ளது. படத்தின் படபிடிப்பில் பல சிக்கல்களை கடந்து கதாநாயகிகள் நடித்துகொடுத்தனர். கேமரா மேனுக்கு இது முதல் படம் மாதிரி இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஒருவரது பணியாக இருந்தது. சண்டை இயக்குனர் ராம் இந்த படத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் சித்து உடன் இணைந்த இரு படமும் எனக்கு வெற்றி தான். இந்த படமும் வெற்றியடையும் என நம்புகிறேன். இந்த படம் புதுமையான ஒன்றாக இருக்க நாங்கள் மிகவும் சிரத்தை எடுத்து பணியாற்றியுள்ளோம். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இந்த படம் இருக்கும். டார்லிங் திரைப்படத்திற்கு பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம், அதனால் படத்தை சிரத்தை எடுத்து உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் விவேக் கூறியதாவது…
முதலில் தயாரிப்பாளருக்கு இந்த கதையை கூறினேன். தயாரிப்பாளர் மற்றும் ஜீவி இந்த படத்திற்கு ஒத்துகொண்டது பெரிய விஷயம். இந்த படத்தின் மூன்று கதாநாயகிகளுக்கும் சமமான பாத்திரபடைப்பு இருக்கும். படத்தொகுப்பாளர் என்னுடன் நெடுங்காலம் பயணம் செய்துவருகிறார். கௌதம் மேனன் சார் இந்த படத்திற்குள் வந்தது, படத்தை இன்னும் பெரிதாக்கியது. ஜீவி சார் உடன் பணியாற்றியது கனவு போல் உள்ளது. சண்டை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குனர் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.