திறமையானவர்கள் யார் நடித்தாலும் போட்டியாக தான் பார்ப்பேன்” – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊடகம் ஒன்றிற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில், “லோகேஷ் கனகராஜ் முதலில் படத்தின் ஒரு வரி கதை சொன்னபோதே பிடித்துவிட்டது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் கதையை டெவலப் செய்தார். திரைக்கதையில் என்னுடைய பங்களிப்பும் உள்ளது. சூர்யாவின் கதாபாத்திரத்திற்காக கடைசி நேரத்தில் தான் அவருக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால், அவர் உடனே ஒத்துக்கொண்டு இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுத்தார். அவருடைய கதாபாத்திரம் தான் ‘விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கான ஒரு தொடக்கமாக அமையும்” என்று கூறினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என திறமையான நடிகர்கள் இருக்கும்போது உங்களுக்கு போட்டி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “நிச்சயமாக திறமையானவர்கள் யார் என்னுடன் நடித்தாலும் அவர்களை என்னுடைய போட்டியாக தான் பார்ப்பேன்” அப்படீன்னு கூறினார்.

பழைய ‘விக்ரம்’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “பழைய ‘விக்ரம்’ படத்தில் உள்ள ஒரு சம்பவம் இந்த புதிய ‘விக்ரம்’ படத்திலும் இருக்கும். அது ஒன்று மட்டுமே பழைய விக்ரமுக்கும் இப்போதுள்ள விக்ரமுக்கும் உள்ள தொடர்பு” என்று சொன்னார் கமல்.

‘பத்தல பத்தல’ பாடலின் அரசியல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது பற்றிய கேள்விக்கு, “நான் எப்போதும் சினிமாவையும், அரசியலையும் பிரித்ததில்லை. என்னுடைய பல படங்களிலும் வெளிப்படையாகவே அரசியல் பேசி இருக்கிறேன்” அப்படீன்னு சொல்லி இருக்கார் கமல்.

Previous article’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Next articleமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேன்ஸ்-ல் உரையாற்றினார்