சிவராஜ்குமார் ரஜினிக்கு வில்லனா?

Cinema News 360 Tamil Cinema

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தலைவரின் 169 படத்தை இயக்குவார் என்ற செய்தி தற்போது ஒருவழியாக உறுதியாகி போச்சு. அனிருத் இசையமைக்க, இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இவர்களுடன் ரம்யா கிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அந்த படத்திற்கு தமிழ் அல்லாது வேறு ஒரு மொழியில் இருக்கும் நாயகர்களை போட்டால் படம் இன்னும் நன்றாக வரும் என்ற எதிர்பார்ப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை அணுகினர். அவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஏற்கனவே மாரடைப்பால் சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பில் இருந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது குடும்பம். எனினும் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும், அவருடைய அண்ணன் சிவராஜ்குமார் குடும்பத்திற்கு எல்லாமுமாக இருந்து அவர்களை தேற்றியதுடன் தற்போது படத்தில் நடிக்கத் துவங்கிட்டார்.

ஆரம்பத்தில் ரஜினிகாந்த் படத்தில் சிவராஜ்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதைப்பற்றி சிவராஜ்குமார் இடம் கேட்டதற்கு, ஆம் ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு இருக்கிறது என்ற ஒரு பதிலைக் கூறிவிட்டு சென்றார்.

இப்பொழுது ரஜினிக்கு ஒரு மாஸ் வில்லனாக நடிக்கிறார் சிவராஜ்குமார் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. சிவராஜ்குமாரை கன்னட ரசிகர்கள் ஒரு கடவுள் போல் பார்த்து வருகின்றனர். இப்பொழுது சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கும் செய்தியை கேட்டு கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைஞ்சிருக்காய்ங்க.

ஏற்கனவே ரஜினியின் பிறந்த ஊரான கர்நாடகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில் அவருக்கே, கன்னட சூப்பர் ஸ்டாரான சிவக்குமார் வில்லனாக நடிக்கப் போவது அங்கே பாதி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஆனாலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹீரோக்களுக்கு செலவு செய்வதற்கு பதில் கதைக்கு செலவு செய்யுங்கள் ” மெய்ப்பட செய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் கால்தடம் பதிக்கும் நடிகர் மஹத்

admin