ரஜினிக்கு தீவிர சிகிச்சையா ? உணமை என்ன ?

 

 

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் பிரமாண்டமாக வெளியாவதில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் தீடிரென ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஜினியின் உடல் நலனுக்கு என்னவானது ரசிகர்கள் கவலையுடன் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ்(necrosis) எனப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுப்பட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப் படுகிறது.ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி பூரண நலமாக இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.