நடிகர் சிம்பு நடிப்பில் 2016 ல் திரைக்கு வந்த ‘ அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ‘ திரைப்படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் சிம்பு குடும்பத்தினர் இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
*மைக்கேல் ராயப்பன் பேட்டி*
” அஅஅ படப்பிடிப்பில் சிம்பு சரியாக கலந்து கொள்ளவில்லை..பெரிய பிரச்சனைகளுக்கு பிறகுதான் படத்தில் நடித்தார்.
அஅஅ படத்திற்காக சிம்பு கேட்டுக்கொண்டபடி பாங்காக் உள்ளிட்ட நாடுகளில் லொகேசன் பார்த்தோம். படக்குழுவினர் 40 க்கும் மேற்பட்டோர் சிம்புவிற்காக பாங்காக்கில் காத்திருந்தனர் . ஆனால் சிம்பு அங்கு செல்லவேயில்லை. பாதி படத்துடன் படப்பிடிப்பை நிறுத்தி , படத்தை வெளியிட சொன்னார். வெளியீட்டின் பிறகு நட்டம் ஏற்பட்டால் , தான் பொறுப்பேற்று கொள்வதாக உறுதியளித்தார். மேலும் எனது தயாரிப்பில் இலவசமாக ஒரு படம் நடித்து தருவதாகவும் கூறினார் . முழு படப்பிடிப்பு நடக்காததால் படம் தோல்வியடைந்தது. சிம்பு கூறியபடி புதிய படத்தில் நடித்து தரவில்லை , அஅஅ நட்டத்தால் விநியோகஸ்தர்கள் தரப்பில் எனக்கு அழுத்தம் தரப்பட்டது.
என்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் சிம்பு.. ஆணையரகத்தில் சிம்பு தரப்பில் புகாரளித்ததால் , நானும் சென்று விளக்கம் கொடுத்தேன்.
சிம்புவிற்கு சம்பளப் பாக்கி இருப்பதாக முரண்பட்ட கருத்தை , பொய்யான தகவலை செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கூறுகிறார்கள் . டி.ராஜேந்தர் படத்தின் லாபம் , நட்டம் தயாரிப்பாளரை சார்ந்தது என்கிறார் . எனக்கு நட்டம் ஏற்படுத்திய எந்த நடிகர்களிடம் நான் பணம் கேட்டதில்லை.. ஆனால் நட்டத்திற்கு பொறுப்பேற்று புதிய படம் நடித்து தருவதாக சிம்பு ஏமாற்றியதால்தான் நியாயம் கேட்கிறேன் , இது எனது உரிமை. படத்தில் 2 கதாபாத்திரத்தில் நடித்து 2கதாபாத்திரத்தில் நடிக்காமல் விட்டுவிட்டார் சிம்பு.
தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் சிம்பு படத்திற்கு ரெட் கார்ட் போடுவதாக பொய் கூறுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தினர் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் என்றால் அதில் ஏன் டி.ஆர் உறுப்பினராக இருக்கிறார் , சங்க தேர்தலில் ஏன் பங்கேற்றார் . எனது படத்திற்காக டி.ஆர் எங்கும் கடன் வாங்கவில்லை. அவர் தரங்கெட்டு பேசுகிறார் . அடுக்கு மொழியில் பேசுவதால் பொய் உண்மையாகாது. சிம்பு குடும்பத்தினர் குடும்பத்துடன் பொய் கூறுகிறார்கள். படம் தொடர்பாக இனி புகாரளிக்க நானும் தயார் . எந்த நடிகரும் சிம்பு போல மாற்றி பேசமாட்டார்கள்.
எனக்கு ஏற்பட்ட நட்டத்தில் 15 கோடியில் 5காசு கூட சிம்பு தரவில்லை. டி.ஆர் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை என்னிடம் அனுப்பியதே சிம்புதான். என்னை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளார் சிம்பு. சிம்பு எனக்கு கால்சீட் தர வேண்டும். ஒரு படத்திற்கு தற்போது சிம்பு 15 கோடி வாங்குவதாக கூறுகிறார்கள்.
சிம்பு குடும்பத்தினர் அடாவடித்தனம் செய்கிறார்கள். சிம்புவிற்கு அஅஅ படத்திற்காக கொடுத்த சம்பளம் தொடர்பாக வெளிப்படையாக கூற முடியாது. மாநாடு படம் தீபாவளிக்கு ஏன் வரவில்லை என தயாரிப்பாளர் தெளிவாக கூறிவிட்டார். நான் மாநாடு வெளியீட்டை தடுக்கவில்லை. மாஃபியா , கந்துவட்டி கும்பல் என யாரை கூறுகிறார் டி.ஆர் ,அதை தெளிவுபடுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் என் மீது மான நஷ்ட வழக்குதான் தொடர்ந்துள்ளனர் , அஅஅ படம் தொடர்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. செய்தியாளர் சந்திப்பு மூலம் தயாரிப்பாளர் சங்கத்தை மிரட்டி வருகிறார் டி.ஆர். அவரது நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் 7 பேரில் 6 பேர் விலகி விட்டனர் . கட்டப்பஞ்சாயத்து செய்யதான் அதை உருவாக்கினார் டி.ஆர்.
சிம்பு அஅஅ படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைத்தாலும் வருவதில்லை. இந்த பிரச்சனைக்கு சிம்புவின் அம்மா அப்பாதன் காரணம். அண்ணன் என்றுதான் சிம்பு என்னிடம் பேசுவார் . அவரை வெளியில் வர விட மாட்டேன் என்கிறார்கள்.
சிம்பு குறைந்த நாட்களிலேயே மாநாடு படத்தை முடித்து கொடுத்ததாக கூறும் சுரேஷ் காமாட்சி, படம் வெளிவந்த பிறகு சிம்பு பற்றிய உண்மையை கூறுவார். சிம்புவை வைத்து படம் எடுத்தபோது நானும் இப்படித்தான் கூறி வந்தேன் ” என்று கூறினார்.