விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் இணைந்து நடிக்கும் படம் !

லாபம் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ரெஜினா காசன்ட்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி உடைய மகள் இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதி – ரெஜினா காசன்ட்ரா இணையும் முதல் படம் இது. இப்போது, விஜய் சேதுபதி தன் மகளுடன் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் படபிடிப்பும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ” முகிழ்” என பெயரிடபட்ட திரைப்படம் , விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி, நடிகராக அறிமுகமாகும் திரைப்படம். அண்மையில் படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களால் பாராட்டபட்டது.
இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, ஸ்ரீஜா விஜய் சேதுபதி உடன் ரெஜினா காசன்ட்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீளபடத்தை விட குறைவான நேரம் உடைய படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தினை எழுதி இயக்குவது, அறிமுக இயக்குனர் கார்த்திக் ஸ்வாமிநாதன். படத்தினை தயாரிப்பது விஜய் சேதுபதி.