பல வருடங்கள் கழித்து சூர்யா திரைப்படத்திற்கு ” A ” சான்றிதழ்

பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் சூர்யாவின்  39வது படமாக ‘ஜெய் பீம்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் , பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.  தா.செ.ஞானவேல் இயக்கும் , இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. தீபாவளியை ஒட்டி, இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
தீபாவளிக்கு அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு  ” A ” தணிக்கை சான்றிதழ் வழங்கபட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான, வன்முறை காட்சிகள் படத்தில் இருக்கிறது.அதனால் இந்த சான்றிதழ் கொடுக்கபட்டுள்ளது.  கடைசியாக சூர்யா நடித்த ரத்த சரித்திரம் திரைப்படம் ” A ” சான்றிதழ் பெற்றது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு  இசை ஷான் ரோல்டன் அமைத்துள்ளார்.
Dhanush Naane Varuven Movie Release on Sept 29th Poster
Previous articleநிவின் பாலியின் புதிய படம் ராமேஷ்வரத்தில் துவங்கியது
Next articleவிஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் இணைந்து நடிக்கும் படம் !