” RRR” படம் வெளியாகும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

 

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது.

 

உலகமெங்கும் ஜனவரி 7-ம் தேதி, 2022-ல் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம்.