Netflix தளத்தில் வெளியிடப்பட்ட நொடியிலிருந்து “ஜகமே தந்திரம்“ திரைப்படம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பேரதிர்வை ஏற்படுத்தி வருகிறது. Netflix வெளியான முதல் வாரத்தில், “ஜகமே தந்திரம்” படத்தினை பார்த்தவர்களின் பிரமாண்ட எண்ணிக்கையில், பாதிப் பார்வையாளர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து பார்த்த பார்வையாளர்களே ஆவர். உலகின் பல மூலைகளிலிருந்தும் ”ஜகமே தந்திரம்” படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகம் முழுக்க 12 நாடுகளில், டாப் டென் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது “ஜகமே தந்திரம்” திரைப்படம். இத்திரைப்படம் மலேஷியா, அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா உட்பட 7 நாடுகளில் டாப்டென் வரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. சுருளியின் ரகிட ரகிட அலப்பறை உலகம் முழுக்க பரவி விரிந்திருக்கிறது.
சுருளி ( தனுஷ் ) எனும், மதுரை லோக்கல் ரௌடி, இங்கிலாந்தில் திடீரென பெரிய அளவில் வளர்ந்து வரும் மற்றுமொரு இலங்கை தமிழ் தாதாவான ‘சிவா’ என்பவரின் சட்டத்திற்கு புறம்பான நிழல் உலக நடவடிக்கைகளை கண்டுபிடித்து, தன் ஆட்களுக்கு கற்றுத்தர, சட்டத்திற்கு புறம்பான ஆயுத விற்பனை மற்றும் தங்க கடத்தலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா பீட்டர் என்பவனால் வேலைக்கு அழைக்கப்படுகிறான். உண்மையில் ஒருவரின் இருப்பிடம் என்பது எது என்பதில் மூன்று பேரின் தனிப்பட்ட பார்வையும், அதற்கான போராட்டமும் தான் சுருளி பாத்திரத்தின் அடிப்படை போராட்டம் ஆகும்.
Netflix தளத்தில் வெளியாகியிருக்கும் “ஜகமே தந்திரம்” படத்தினை காணத்தவறாதீர்கள்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.