புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை .ஆகையால் நிரந்தரமாக குரங்குகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டும் ,குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் வழங்கியும் மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் ,சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ,தளபதி விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்