அனுஷ்கா ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார் – ஹேமந்த் மதுர்கர்

நிசப்தம் படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா ஷெட்டி கடினமாக உழைத்துள்ளார். இதற்காக ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார்.

அனுஷ்கா ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என்கிறார் நிசப்தம் இயக்குநர் ஹேமந்த் மதுர்கர்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் சமீபத்திய சஸ்பென்ஸ் த்ரில்லரான நிசப்தம் திரைப்படம், ஒரு மர்ம பங்களாவில் நடந்த ஒரு சம்பவத்தின் முக்கிய சாட்சியாக மாறும் வாய் பேச முடியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவுக்காக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா மிகச் சிறப்பான முறையில் எவ்வாறு தயாரானார் என்பதை பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் ஹேம்ந்த மதுர்கர்.

இது குறித்து இயக்குநர் கூறும்போது, “அனுஷ்கா சைகை மொழிகளை கற்றுக் கொண்டார், நான் அவரிடம் படத்தின் கதையை படித்துக் காட்டியபோது அவரது கதாபாத்திரம் ஒரு ஒவியர் என்று கூறினேன். ஒரு படத்தில் திடீரென ப்ரஷ் உடன் தோன்றும் ஒரு நடிகையாக இருக்க அனுஷ்கா விரும்பவில்லை. தான் ஒரு தொழில்முறை ஓவியராக தெரிய வேண்டும் என்று அவர் விரும்பினார்.

கதபாத்திரத்துக்காக அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் பிடித்தது. அவர் ஓவியம் மற்றும் இரண்டு விதமான சைகை மொழிகளையும் கற்றுக் கொண்டார். ஒன்று இந்திய சைகை மொழி மற்றொன்று சர்வதேச சைகை மொழி. இரண்டில் எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டார். இரண்டையுமே கற்றுக் கொள்ளுமாறு அவரிடம் நான் சொன்னேன். படத்தில் அவர் இந்திய மற்றும் அமெரிக்க நடிகர்களிடமும் அவர் பேச வேண்டும்.” என்றார்.

தனது கதாபாத்திரத்துக்காக அனுஷ்கா காட்டிய ஈடுபாடும், செய்த ஆய்வும் பாராட்டத்தக்கது. மேலும் கலையில் அவரது அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது. திரையில் அவரது நடிப்பு அற்புதமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவரது கடின உழைப்புக்கு பலனும் கிடைத்துள்ளது.

ஆர்வத்தை தூண்டக்கூடிய கதைக்காக அவசியம் பார்க்க வேண்டிய இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக கிடைக்கிறது. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டிஜி விஷ்வா பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அமெரிக்க நடிகரான மைக்கேல் மேட்சென் முதல் முறையாக இந்திய படமொன்றில் அறிமுகமாகிறார். இவர்களோடு ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவஸராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.