படத்தின் ஒவ்வொரு பிரேமையும் பார்க்கும் போதும்… எவ்வளவு நல்ல நடிகன் ஏன் இப்படி ஒரு முடிவு என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை…
தற்கொலை எண்ணங்கள் விவரிக்க முடியாதவை… சிறுவயதில் குஞ்சு தபாதத்தில் சிற்றெறும்பு கடித்த கதைதான்… 100 வாட்ஸ் வெளிச்சத்தில் டவுசர் அவுத்து பார்த்து விட்டாலும்…. கடித்தது போல இருக்கும் வலி… இரவு முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்… வலியையும் வேதனையும் யாரிடமும் சொல்லவும் முடியாது… அப்படியே நம்பிக்கையானவர்களும் காட்டினாலும்… எறும்பு தான் இல்லையே என்று நம்மை பார்ப்பார்கள்… சுஷாந்த் அந்த நிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.
சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் சுஷாந்த் கலக்கியிருக்கிறார்…
வசனங்கள் எல்லாம் அற்புதம்… இன்னும் நீ கற்போடு இருக்கிறாயா?? ஆமாம் இன்னும் கற்போடு இருக்கிறேன் அந்த கற்பை சுவிட்சர்லாந்து பேங்க் லாக்கரில் வைத்திருக்கிறேன்… நான் இறந்தவுடன் போ எடுத்துக்கொள் என்று சொல்லும் அந்த சீன் செம.
அதே அம்மா பாரிசில்… அந்த ரெஸ்டாரன்டில் மகளோடு பேசிக் கொண்டிருக்கையில்… சுஷாந்த் புரிந்துகொண்டு நெளியும் அந்த கட்டமும்… Long walk என்று அமெச்சூர்டாக அந்த அம்மா கடக்கும் இடம் ஆவ்சம்.
சஞ்சனா கண்கள் அழகோ அழகு… முக்கியமாக நண்பனாக அவனை ஏற்றுக் கொண்ட அந்த தருணத்தில்…
ரகுமான்… தில் பேச்சாரா பாடலைப் பாடி கலக்கிவிட்டார்… அதுவும் சிங்கிள் டேக் …
முக்கியமாக அந்த தண்ணீரில் இருக்கும் மாடி பஸ் in to the wild திரைப்படத்தை ஞாபகப்படுத்துகிறது… ரம்யமான இடம்… ஒளிப்பதிவு அருமை..
க்ளைமாக்ஸில் கதறல் நிச்சயம்.
https://youtu.be/nipxnx4i6GI