ஒரு சூபி இசை கலைஞனுக்கும்… வாய் பேசமுடியாத பெண்ணுக்கும் ஏற்படும் காதல்… என்னவானது என்பதுதான் ஒரு வரிக் கதை…
ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரிதான்…
ரகுமான் வருகைக்குப் பிறகுதான் சுபி இசை என்றால் என்ன என்று எனக்கு தெரியும்.
வந்தே மாதரம் ஆல்பத்தில்.. நசரத் போதே அலி கான் பாடிய சந்தா சூரத்…. பாடல் மூலம் அறிமுகம்…
காற்று வெளியிடை பிடித்துப்போக அதிதி ராவ் ஒரு மிக முக்கிய காரணம்.. அந்த மூக்கும் உதடும் பல கதைகள் பேசும்.. மனதை என்னவோ செய்யும்…
குளக்கரையில் பாட்டி மஞ்சள் பூசி உட்கார்ந்து மஞ்சள் தேய்த்துக் கொண்டிருக்கும் காட்சி… மிகச்சிறந்த கவிதையான காட்சி…
ஜெய சூர்யாவும் மோகன் தேவேம் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்…
காதல் உணர்வுகளை கடத்தும் படம்… மிக மெதுவாய் செல்கிறது… ஒரு சிலருக்கு பிடிக்கலாம் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம்…
காதல் என்பதாலும் அதிதிராவாலும் படம் எனக்கு பிடித்திருக்கிறது…
அமேசான் ப்ரைம் இல் வெளியான முதல் ஓட்டிடி ரிலீஸ் மலையாள திரைப்படம்
ட்ரை செய்து பாருங்கள்
https://youtu.be/OkAo2cBbUUo