சென்சார்அதிகாரிபார்த்துபாராட்டிய”கருத்துகளைபதிவுசெய்“

SSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்” படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.