Thanks Note From Stunt Masters Anbariv

இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் எங்களுக்கு நிறையவே பெருமிதம்.

‘கேஜிஎஃப்’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது நீங்கள் அறிந்ததே. அத்திரைப்படத்தின் அதிரடி காட்சி அமைப்புகளுக்காக, எங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது.

இத்தகைய முக்கியமான தருணத்தில், முதற்கண் எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கும், எங்களோடு இணைந்து பணியாற்றிய சக தொழிட்நுட்ப வல்லுனர்கள், நடிக – நடிகையர், ஆகிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த பிரிவில் எங்களுக்கு விருதுக்கு பரிந்துரைத்த, ஆய்ந்து தெரிவு செய்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இது அயராத உழைப்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி . பல வருடங்களாக திரைப்படங்களுக்கான அதிரடி காட்சி அமைப்பில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு ‘கைதி’ 100வது திரைப்படம். 100 வது படம் வெளியாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு இந்த தேசிய விருது கூடுதல் மகிழ்வையும், உத்வேகத்தையும் அளித்திருக்கிறது. தற்போது கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கும் அதே குழுவுடன் பணியாற்றி வருகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஒரு தருணம், ஊடக நண்பர்களாகிய உங்களது பங்களிப்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை. உங்களது பணி மிகவும் மதிப்பிற்குரியது, பாராட்டுக்குரியது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

அன்புடன்

அன்பறிவ்