A1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும்

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது.

விழாவில்,
ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது,

” இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணன் அவர்களோடு எனக்கு இது முதல் படம்” என்றார்

ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் பேசும்போது,

“இந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் சார் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் பைட் இருக்கும். இந்தப்படத்திலும் அப்படியான பைட் பண்ணிருக்கார்” என்றார்

எஸ்.பி சவுத்ரி பேசும்போது,

“படத்தை சந்தானம் சார் போட்டுக்காட்டினார். படம் செம்மயாக வந்திருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானம் சாருக்கு நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,

“இந்த மேடையில் சந்தானம் சார் இருக்கிறதால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்கு பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப்படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப்படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப்படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக படம் இருக்கும்” என்றார்

கதாநாயகி தாரா அலிசா பெரி பேசும்போது,

“சந்தானம் சார் இயக்குநர் ஜான்சன் சார் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை ” என்றார்

இயக்குநர் ஜான்சன் பேசும்போது,

“முதல் நன்றி தயாரிப்பாளர் ராஜ் சாருக்கு. அவர் தான் என்னை சந்தானம் சாரிடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. ஏன் என்றால் எங்கள் டீம் அப்படி. ஆனால் கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். படம் உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் சார் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமரான் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்” என்றார்.

நடிகர் சந்தானம் பேசும்போது,

“தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரெ மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் இனிமே இப்படித்தான் படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம் இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்

மேலும் படத்தில் வேலை செய்த அத்தனைபேர்களின் பெயர்களையும் சொல்லி சந்தானம் நன்றி சொன்னார்.