Fast & Furious தொடர் படங்களை பார்த்து ரசித்து பாராட்டாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு இது வரை வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக உலக அளவில் மகத்தான வெற்றியை பெற்று அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளன என்றால் அது மிகையில்லை!
இதுவரை வெளிவந்த Fast & Furious தொடர் படங்களின் வசூல் மொத்தமாக $ 5 billion-ஐ கடந்து விட்டது என்பது உண்மை!
சட்ட விரோதமான முறையில் பைக் மற்றும் கார் சேசிங் நடத்தி அதை ஒரு சூதாட்டமாக மாற்றிவிட்டது ஒரு கும்பல்!
அடுத்தடுத்த தொடர்களில், பைக் மற்றும் கற் சேசிங் தவிர இதர அதிரடி action சம்பவங்களை ஒருங்கிணைத்து பலம் மிக்க ஒரு தொடராக (Franchise) ஆக உருமாறிவிட்டன, Fast & Furious தொடர் படங்கள்!
வயது வரம்பின்றி எல்ல வயதினரும் பாரபட்சமின்றி கண்டு ரசிக்கத்தக்க action காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம் எனலாம்!
நாலைந்து பேர் கூட்டாக செயல்படும் வழிமுறையிலிருந்து சற்று விலகி, இம்முறை இருவர் மற்றும் பங்கேற்கும் விதத்தில் Fast & Furious: Hobbs & Shah வின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது।
Rock என அழைக்கப்படும் Dwayne Johnson மற்றும் The Transporter பட தொடர்களில் நடித்து புகழ் பெற்ற Jason Statham ஆகிய இருவரும் பிரதான பாகங்களில் தோன்றி நடித்துள்ளனர்! முந்தைய Fast & Furious படங்களில் இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக சண்டையிட்ட வண்ணம் உலா வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Idris Elba வில்லனாக, Brixton Lore என்கிற கதாபாத்திரத்தில், ஒரு தீவிரவாதிகளின் கூட்ட தலைவனாக இப்படத்தில் தோன்றியுள்ளார்।
மனித குலத்திற்கு எதிரான ஒரு சில நாச வேலைகளில் அவரும் அவரது கூட்டமும் ஈடுபடுவதின் விளைவாக,
DSS Federal Agent -ஆன Luke Hobbs (Dwayne Johnson) மற்றும் முன்னாள் ராணுவ வீரரான Deckard Shah (Jason Statham ) ஆகிய இருவரும் Brixton Lore என்கிற வில்லனூடு மோதி அவனது மற்றும் அவனது கூட்டாளிகளின் சதி திட்டங்களை முறியடிக்க பணிக்கப்படுகிறார்கள்!
மீதி கதையின் விவரம் பற்றி விவரிக்க தேவையில்லை!
Los ஏஞ்சல்ஸ்,லண்டன், Samoa Chernobyl ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது!
Jonathan Sela ஒளிப்பதிவை கையாள, Tyler Bates இசையமைத்துள்ளார்।
Gary Scott Thompson உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடைப்படையில், படத்தின் கதையை எழுதியுள்ள Chris Morgan , Drew Pierce உடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் அமைத்துள்ளார்।
படத்தை இயக்கியுள்ளவர் David Lietch.