பாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியாவின் முதல் சமஸ்கிரித படமான அஹம் பிரம்மாஸ்மிமை இயக்கியவரும் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக்கில் உள்ள ராணுவ பள்ளியில் பயின்றவர் இயக்குனர் ஆஸாத்.
ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம். சமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். உலக அளவில் ரசிகர்களை பெற்ற படம் ராஷ்ட்ரபுத்ரா.
இந்த படத்தை தயாரித்த நிறுவனம் பாம்பே டாக்கீஸ். சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் மூத்த நிறுவனமான பாம்பே டாக்கீஸ் மிகுந்த பாரம்பரியம் மிக்கது. தென்னிந்தியாவில் நிறைய நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாம்பே டாக்கீசுக்கு உண்டு. குறிப்பாக, மாபெரும் ஜாம்பவான்களான ஜெமினி கணேசன், எல்.வி பிரசாத், எஸ்.எஸ்.வாசன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளித்து, தமிழ் சினிமாவை உச்சத்துக்கு உதவிய நிறுவனம் பாம்பே டாக்கீஸ். இதுவரை 116 படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனம், 260 படங்களை விநியோகம் செய்துள்ளது. 280 ஜாம்பவான்களை உருவாக்கி உள்ள பாம்பே டாக்கீஸ், 700க்கும் அதிகமான படங்களுக்கு நிதியுதவி அளித்திருப்பதுடன், 400க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகளையும் அமைத்திருக்கிறது.
இப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரிய இந்நிறுவனம் தேசியவாத கொள்கையில் உறுதியாக இருக்கும் இயக்குனர் ஆஸாத்துடன் இணைந்து தமிழில் தயாரிக்கும் படம் தான் ராஜ்யவீரன்.
இந்த படத்தில் ஆஸாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்ஷய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி, நசிர் ஜானி, வாக்கர் கான், டீப் ராஜ் ரான, அபை பார்கவ், ராசா முரத், மனிஷ் சவுத்தரி மற்றும் ஜாகிர் ஹுசைன்ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை: பப்பி லஹரி மற்றும் ஆசாத்
பாடலாசிரியர்கள்: கோஸ்வாமி துளசிதாஸ், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா,
சந்தீப் நாத் மற்றும் ஆசாத்.
ஒளிப்பதிவாளர்: சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே.
சண்டைக் காட்சிகள்: கௌஷல் மோசஸ் மற்றும் ஹனீப் கான்
முழுக்க முழுக்க தமிழ் கலாச்சாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. மேலும் இந்திய தேசியவாத கொள்ளையை ஆயுதமாக பயன்படுத்தி எதிரிகளை கையாளும் இந்த படம், அடிமைத்தனத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும். தேசப்பற்றை போற்றும் வகையில் இப்படம் உருவாகிறது.
இந்த சமூகத்தில் தேசப்பற்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு ராஜ்யவீரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆஸாத் விடை தருவார்.
இந்த படத்தை பாம்பே டாக்கீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமினி தூபே தயாரிக்கிறார். இந்த படத்தை உங்களுக்கு வழங்குவோர், இந்திய சினிமாவின் தூண் ராஜ்நாராயன் தூபே, சர்வதேச பாம்பே டாக்கீஸ் பவுண்டேஷன், விஷ்வ சாகித்ய பரிஷத், உலக இலக்கிய கழகம் மற்றும் ஆசாத் பெடரேஷன் ஆகியோர்..