வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சமயத்தில், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஆகியோர் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி தேர்தலில் போட்டியிடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூத்த நடிகர் திரு கே. பாக்யராஜ் அவர்கள் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா AL ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
திருமதி பூர்ணிமா பாக்யராஜ்
திருமதி சங்கீதா,
திருமதி ஆர்த்தி கணேஷ்,
திருமதி காயத்ரி ரகுராம்,
திருமதி ரஞ்சனி,
திருமதி சிவகாமி,
திரு கே.ராஜன்,
திரு. பாண்டியராஜன்,
திரு. சின்னி ஜெயந்த்,
திரு. ரமேஷ் கண்ணா,
திரு. ஷ்யாம்,
திரு. பரத்,
திரு. ஸ்ரீகாந்த்,
திரு. விமல்,
திரு. நிதின் சத்யா,
திரு. அயூப் கான்,
திரு. மருதுபாண்டியன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
கூடுதலாக, இன்னும் சில நாடக கலைஞர்கள் இந்த அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். இந்த புதிய அணியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.