நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள். கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.
சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.
அன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.
எடிட்டராக தனது சிறப்பான பணியை
K.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.
இப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுத
கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.