கபடி விளையாட்டை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு எல்லா தரப்பு மக்களையும்பெரிதும் கவர்ந்தது. இப்படத்தின் மூலம் விஷ்ணு, புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் அனைவருக்கும் அங்கீகாரம்கிடைத்தது. மீண்டும் சுசீந்திரன் மூலகதையில் செல்வசேகரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு -2 உருவாகியுள்ளது.
இப்படத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாக படமாக்கியுள்ளார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ராந்த், கதாநாயகியாக அர்த்தனா பினு,புரோட்டா சூரி,கிஷோர் , அப்புக்குட்டி, பசுபதி மற்றும்பலர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு :E.கிருஷ்ணசாமி ,
இசை :செல்வகணேஷ், சண்டை:சூப்பர் சுப்ராயன்.
நிஜ கபடி வீரர்களுடன் விளையாடிய கபடி விளையாட்டை தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள். கபடி பிரியர்களுக்குமட்டுமல்ல எல்லா தரப்பினருக்கும் வெண்ணிலா கபடிக்குழு -2 பிடிக்கும். சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம்,ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை, படங்களின் விநியோகஸ்தருமான பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார் .