பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு “கைலா” என்று வைத்துள்ளனர்.
இந்த படத்தில் தானாநாயுடு கதா நாயகியாக நடித்துள்ளார்..மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் – பாஸ்கர் சீனுவாசன்
ஒளிப்பதிவு – பரணி செல்வம்
இசை – ஸ்ரவன்
பாடல்கள் – வடிவரசு
கலை – மோகன மகேந்திரன்
நடனம் – எஸ் எல் பாலாஜி
தயாரிப்பு நிர்வாகம் – ஆர் சுப்புராஜ்
எடிட்டிங் – அசோக் சார்லஸ்
பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் சார்பாக முதல் தயாரிப்பாக ‘கைலா’ உருவாகியுள்ளது.
கொடைக்கானல் சென்னை பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 45நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானாநாயுடு துபாயில் பிறந்து வளர்ந்தவர் இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக 45நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..
உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது
தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்.
அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்கினோம்.
ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம் என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன். இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.