விவசாயி தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை.
ஆகவே எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத அவர் படித்த இளைஞர்களை முன்னிருத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் ஒரு
வீர விவசாயின் கதை.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ்
ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓளிப்பதிவு – கே.வி.மணி
பாடல்கள், இசை – கோண்ஸ்
எடிட்டிங் – B.S.வாசு
ஸ்டண்ட் – நாக் அவுட் நந்தா
தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – என்.பி. இஸ்மாயில்
சிங்கமுகம், சொல்லமாட்டேன், வாங்க வாங்க போன்ற படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள நான்காவது படம் இது.
உழவன் இல்லாத உலகம் உனக்கு ஒரு பிடி சோறு எப்படி கிடைக்கும்…
மண்ணுண்டு நீருண்டு விதையுண்டு மனிதா மனம் கொண்டு உழைத்தாலே கிடைக்காத பலன் தான்…
என இரு தத்துவ பாடல் வரிகள் இதயங்களில் இடம் பிடிக்கும்.
சேலம் அருகே உள்ள தீர்த்தமலை, வேட கட்டுமடுவு கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பள்ளி மாணவர்களும் தலைமை ஆசிரியரும் படப்பிடிப்பிற்கே வந்தனர்.திகைத்துப் போன இயக்குனர் படப் படப்பிடிப்பினால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லையா?என்ற அச்சத்துடன் எதிர்நோக்க நம் வாழ்வாதாரமே விவசாயம்தான் அதற்காகவே படம் எடுக்கும் உங்களை பார்த்து வாழ்த்து சொல்ல வந்தோம் என்றதும் மனம் குளிர்ந்தார் இயக்குனர். முடிந்தால் எங்கள் மாணவர்களுக்கு விவசாயம் பற்றி சொல்லிக் கொடுங்கள் என்றார் தலைமை ஆசிரியர் .உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவர் வேண்டுகோளுக்கு இனங்க பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து விட்டு விடைபெற்றார் இயக்குனர்.
பழனி, சேலம், தர்மபுரி,அரூர் அருகே உள்ள தீர்த்தமலை, வேடகட்டுமடுவு ஆகிய ஊர்களில் தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.