அன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர்சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார், ரேகா ஆகியோரது நடிப்பில், கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவபாவலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ சிதம்பரம் ரயில்வேகேட் “
கிரவுன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்திருப்பவர் S.M.இப்ராஹீம். அவரது மகள் M.ராஷிஹா பரகத் – M.நசிருதீன் இவர்களது திருமணம் நேற்று மாலை 6 மணியளவில் கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி ராஜேஸ்வரி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் சிதம்பரம் ரயில்வேகேட் படத்தின் இயக்குனர் சிவபாவலன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, நடிகை ரேகா, நடிகர் மயில்சாமி, பொன்னம்பலம், டேனியல்,பவர்ஸ்டார், அன்புமயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், நாயகி நீரஜா, காயத்ரி, விக்ரம், நடன இயக்குனர் அசோக்ராஜா,ஒளிப்பதிவாளர் வேல் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மற்றும் ஏராளமான திரையுகினரும், தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.