காதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜாக் சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவுக்காரரை சந்தித்து வேலை கேட்கிறான்.
ஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அதே வேலை செய்து படிப்படியாக பெரிய கேங்ஸ்டராகிறான் ஜாக்.
ஒரு சமயத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வர அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறான் என்பதை கூறுவதே கதை. சிங்கப்பூர் கேங்ஸ்டர்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை.
ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிங்கப்பூரின் ஒரு மிகப்பெரிய டானாக ஏஸ் (ACE) எனும் கதாபாத்திரத்தில் அட்டகாசமான வில்லனாக நடித்து இயக்கி தயாரித்து உள்ளார் ஜோ ஜியோவானி சிங்.
ஜாக் எனும் கதாபாத்திரத்தில் முரளிராம் கதாநாயகனாக நடிக்க சிங்கப்பூரின் பாப் பாடகியும், மாடலிங்குமான நபீஸா பேகம் ஜலாலுதின் கதாநாயகியாகியுள்ளார். மேலும் இரண்டாம் கதாநாயகியாக ஷ்ரீன் காஞ்ச்வாலா, ஹபிபி, விக்கி, பிரபு, கதிரேசன்ராஜ், சாவித்திரி ஆகியோருடன் நடன இயக்குனர் தினா, ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சலீம் பிலால்
இசை – பிரவீன், சரவணன்
பாடல்கள் – அருண்காமராஜா, உமாதேவி, நோவா, ஷாரிகா
எடிட்டிங் – ராமகிருஷ்ணன், சதீஷ்குமார்
ஆர்ட் டைரக்டர் – சரவணன் அபிராமன்
நடனம் – தினா
ஸ்டண்ட் – ‘ஸ்டன்னர்’ ராம்
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – ஜோ ஜியோவானி சிங்
இப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே இரு கட்ட படப்பிடிப்பாக 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் அமர்க்களமாக இடம் பெற்றுள்ளது.