தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொதுநலன்கருதி’.
5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன்.
நெல்லை கணவன்-மனைவி தற்கொலை
நெல்லையில் கந்துவட்டியால் கணவன்-மனைவி தற்கொலை, மகன் படிப்புக்கு வாங்கிய வட்டிக்காக திருச்சியில் ஏழை விவசாயி தற்கொலை, இப்படி கந்து வட்டியால் நடந்த நிஜ சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.கந்துவட்டி மாஃபியாக்கள் அப்பாவி மக்களிடம் மனரீதியாக எப்படியெல்லாம் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை புதிய கோணத்தில் கையாண்டுள்ளார்கள்.
நடிகர்கள்
கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித், யோக்ஜாப்பி, இமான் அண்ணாச்சி, முத்துராம் நடிக்க அனுசித்தாரா, Subiksha, லீசா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்- சீயோன், தயாரிப்பு- அன்புவேல்ராஜன், இரும்புத்திரைக்கு பிறகு பி.டி.செல்வக்குமார் இப்படத்தை பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடுகிறார்.