இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ கதாநாயகனானார்

பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்ற கருவை கதையாக கொண்டு சஸ்பென்ஸ் த்ரில்லாராக உருவான படம் “காசுரன்”

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ “காசுரன்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் டமால் டுமீல் படத்தை இயக்கியவர் என்பது குறிப்படத்தக்கது

மேலும் இப்படத்தில் அங்கனா ஆர்யா, ஸ்ரீநிவாசன், அவினாஷ், கவிதா ராதேஷியாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்ட “காசுரன்” படம் நண்பர்கள் 30 பேர் ஒன்றாக சேர்ந்து அவர்களால் உருவாக்கப்பட்டது.

தயாரிப்பு – ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜெ
இயக்கம் – ஜித்தா மோகன்
ஒளிப்பதிவு – பராந்தகன் இ
இசை – பிரணவ் கிரிதரன்
படத்தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன்
பாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ் பிரபாகர்.எம்
ஸ்டண்ட் – ஜி
நடனம் – லலிதா ஷோபி
கலை – எஸ்.எஸ். சுசீ தேவராஜ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்