இம்மாதம் வெளியாகிறது சார்லி சாப்ளின் -2

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2”

இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.

கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ,ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, ,பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன் / இசை – அம்ரீஷ்

பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா

எடிட்டிங் – சசி / கலை – விஜய்முருகன் / நடனம் – ஜானி ,ஸ்ரீதர்

ஸ்டண்ட – கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்

தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி – திலீபன்

இணை தயாரிப்பு…சந்திரசேகர்..சரவணகுமார்..

தயாரிப்பு – T.சிவா

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது…

என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்…

சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது…

16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது…

பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார்…

நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார்…பிரபு சார் டாக்டராகவும்

அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள்…

படத்தில் இடம் பெற்றுள்ள கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது..

லட்சக் கணக்கில் டப் மேஷ் உருவாக்கப் பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது…

படப்பிடிப்பு கோவா கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது…

இம்மாதம் 25 ம் தேதி படம் வெளியாகிறது…

Previous articleமுனி 4 காஞ்சனா 3 – படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் – ராகவா லாரன்ஸ் நன்றி
Next articleAnnachi Kondadu Lyrical Video – Paris Paris