வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.
இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..
‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது.
‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்