துப்பாக்கி முனை வெற்றி விழா

0

கலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை.

இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L. V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி.. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Previous articleசென்னையின் பிரமாண்ட தியேட்டர் திரை பிவீஆர் P XL
Next articleActor Sarathkumar Inaugurated Flux Fitness Studio At OMR