23 நாட்களில் படமான அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் என் காதலி சீன் போடுறா

2

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்…சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.

நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் – ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “ என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்க பலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட்மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் ராம்சேவா.

Previous articleEn Kadhali Seen Podura Movie Pics
Next articleSony YAY! Calls Kids Across The Country To Find A Lost Pug, Shantilal!