நித்தீ கிரேயர்ட்டர்ஸ் வழங்கும் வசந்த பாலனிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த புதுமுக இயக்குனர் மகி இயக்கத்தில் பி ராஜசேகரன் தயாரிப்பில் வெளியாகும் காட்சி பிழை.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர்களான ஹரி ஷங்கர் மேகினா ஜெய் சரண் தான்யா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் வேகமாக பரவி வரும் Living Together கலாச்சாரத்தை மையமாக வைத்து மிகவும் ஜனரஞ்சமாக கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் மகி.
தமிழ் சினிமாவில் Living Together கதைகள் வருவது குறைவே அப்படியே வந்தாலும் முகம் சுளிக்கும் காட்சிகள் இருப்பதால் மக்களிடையே வரவேற்பு கிடைப்பதில்லை ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு Living Together வாழ்க்கையில் இதுவரை காட்டாத பகுதியை அனைத்து மக்களும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
காட்சி பிழை வரும் வெள்ளி ( டிசம்பர் 28 ) முதல் திரைக்கு வரவிருக்கிறது.