MAARI 2 Press Meet

17

நடிகர் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாரி 2 . இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் பேசியவை” இந்த படம் எடுக்க முக்கிய பக்கபலமாக இருந்த தனுஷ் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் படத்திற்கு யுவன் மூன்று அருமையான பாடல்கை தந்துள்ளார்.படத்தில் வில்லன் வேடத்தில் டோவினோ நடித்துள்ளார்.

மாரிக்கு ஒரு மாஸ் வில்லனாக அமைத்துள்ளார்.படத்தில் நடித்த கிருஷ்ணா ,வரலட்சுமி மற்றும் சாய்பல்லவி ,ரோபோ சங்கர் , வினோத் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.டிசம்பர் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஆடியன்ஸ் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெரும் என பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் பேசியவை ‘ எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி .எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன்.

மாரி நல்லவனும் இல்லை , கெட்டவனும் இல்லை .அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.குடும்பத்தோட ரசிச்சி பாக்கலாம் .

மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும்.இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார்.அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.யுவன் அவர்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கிறேன்.அவர் 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். டோவினோ நடிப்பு பிரமாதம்.சாய் பல்லவி , மற்றும் வரலட்சுமி ஆகியோருடன் முதன் முதலாக நடித்ததில் மகிழ்ச்சி .ரோபோ சங்கர் மற்றும் வினோத் ஆகியோர் உடன் படப்பிடிப்பில் நடித்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. படப்பிடிப்பிற்கு சென்றவுடன் முதலில் அவர்களை தான் தேடுவேன் . அனைவருடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி . படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அனைவரும் திரையில் கண்டு பாருங்கள்.கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமையும் என பேசினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் யுவன் சங்கர் ராஜா பேசியவை: வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரொம்ப கேப் விட்டு தனுஷ் அவர்களுடன் இணைத்துள்ளேன்.மிகவும் சந்தோசமாக இருக்கிறது என பேசினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி பேசியவை ”
இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தனுஷ் சார் அவர்களுடன் முதன் முதலில் ஜோடியாக நடித்துள்ளேன். படப்பிடிப்பில் கலகலப்பாக இருப்பார்கள் அனைவரும் . இந்த கதாபாத்திரம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .. என பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியவை ” இயக்குனர் பாலாஜி மோகன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்திக்கொள்கிறேன் மேலும் படத்தில் நடித்த அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் , இவ்வாறு பேசினார் .

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கிருஷ்ணா பேசியவை ” தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி .வாய்ப்பளித்த இயக்குனர் பாலாஜி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவாறு பேசினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வுண்டர்பார் வினோத் அவர்கள் பேசியவை ” எதிர்நீச்சல் முதல் மாரி 2 வரை தனுஷ் சார் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதால் மகிழ்ச்சி. படம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது . அனைவரின் ஆதரவிரற்கு மிக்க நன்றி என பேசினார்.

Previous articleAn Other Director’s Son Marks His Entry!!!
Next articleI Could Feel The Heat Of Jayam Ravi’s Ferocious Cop Act On The Sets – Cinematographer Sathyan Sooryan