மன்சூரலிகான் இயக்கி நடித்த “கடமான் பாறை ” படத்திற்கு “A” சான்றிதழ்

8

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும்
படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கடமான் பாறை படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இது பற்றி குறிப்பிட்டுள்ள மன்சூரலிகான் நான் எதிர்த்தது தான்.

என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது அதனால் “ A “ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது.

காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில். என்கிறார் மன்சூரலிகான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடை பெற உள்ளது.

Previous articlePettikkadai Audio Launch Stills
Next articleதனித்தொகுதி எம்,எல்,ஏக்கள் எம்,பி க்கள் பட்டியலின மக்களின் பிரச்சினைகளை பேசுவதில்லையே ஏன்? பா.இரஞ்சித் கேள்வி