தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக இருக்கிறது என தனுஷ் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார்,கிருஷ்ணா ,ரோபோசங்கர் ,வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

நடிகர்கள் :

1. தனுஷ்

2. சாய் பல்லவி

3. கிருஷ்ணா

4. டோவினா தாமஸ்

5. வரலெஷ்மி சரத்குமார்

6. ரோபோ சங்கர்

7. வினோத்

8. அஜய் கோஷ்

9 .வித்யா பிரதீப்

தொழில் நுட்பக்குழு :

எழுத்து, இயக்கம் : பாலாஜி மோகன்

இசை : யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

எடிட்டிங் : பிரன்னா ஜி.கே

ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர்

சண்டை பயிற்சி : சில்வா

தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின்

நிர்வாக தயாரிப்பு : எஸ். வினோத் குமார்

தயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ்

மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

Previous articleமுதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும்
Next articleHarish Kalyan’s Challenging Moments At Paradisiacal Ladakh