தமிழர்களின் ஒயிலாட்டம் கின்னஸில் இடம் பிடித்தது!

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் நேற்று இடம்பிடித்துள்ளது. அதற்கான எட்டு நிமிட ஒயிலாட்ட நடனம் சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ஜெயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

1415 க்கும் மேற்பட்டவர்கள் ஆடினார்கள். இந்த சாதனை நிகழ்வினை நடத்த பின்னணி பாடகர் வேல் முருகனும் ஸ்வரங்களின் சங்கமம் அமைப்பினரும் ஜெயா கல்லூரி நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா, பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலா வேல்முருகன், சௌமியா ராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Previous article‘டூ லெட்’ படம் பார்த்து மிரண்ட ஈரானிய இயக்குநர்
Next articleமலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை மீட்டெடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ