திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நடத்தும் PEACE FOR CHILDREN கார்னிவல் விழா

திருமதி லதா ரஜினிகாந்த் இந்த பயணத்தை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது . (Peace For Children )என்ற அமைப்பினை அனைத்து ஊர்களிலும் தொடங்க இருக்கிறார்கள்..குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினையோ எது நடந்தாலும் குழந்தைகள் சேமிப்பு அல்லது காப்பது என்ற பிரிவு உள்ளது .அதில் அவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் நிறுவப்பட உள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்,குறைகள்,எதுவாக இருந்தாலும் அருகில் உள்ள Peace For Children அமைப்பின் மூலம் தெரிவிக்கலாம். தகவலை தெரிவிக்க troll free நம்பர் மற்றும் முகவரியை தெரிவித்தனர் .இந்த அறிவிப்பு பலகையை திரு ரஜினிகாந்த் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திறந்து வைத்தனர் .

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,நடிகர் தனுஷ் ,இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சிம்ரன்,இயக்குநர் எஸ்பி முத்துராமன், சௌந்தர்யா ரஜினிகாந்த் ,ஐஸ்வர்யா தனுஷ், பாபி சிம்ஹா, ராகவா லாரன்ஸ், அனிருத் ,கலைப்புலி S தாணு போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.