அழியாத கோலங்கள் – 2 படத்திற்கு நிச்சயம் விருது !

3

படம் ஆரம்பித்தது. அர்ச்சனா தெரிந்தார். அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது…

மெதுவாக ஆரம்பித்த படம் …

நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது…

பிரகாஷ்ராஜ் வந்தார்..

நடித்தார் ..என்று சொல்ல முடியாது…

எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்..

போலீஸ் வேடத்தில் நாசர்…காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார்…

ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்…

இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி…

அடிதடி இல்லை…குத்து பாட்டு இல்லை…காமெடி இல்லை.
டுயட் இல்லை…

இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்…

இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே. அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள் 2 நிகழ்த்தி இருக்கிறது. கொண்டாட வேண்டிய படமே..இது

அர்ச்சனா ரேவதி பிரகாஷ்ராஜ் நாசர் இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும்…

Previous articleThe Case of Itaewon Homicide 2009 Korean Movie Review
Next articleகோடையை கொண்டாட வருகிறது ராகவாலாரன்ஸின் முனி 4 -காஞ்சனா – 3