இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு

0

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”.

சிறு குழுந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை முன்னிருத்தி எடுக்கப்படும் இப்படத்தின் தொடக்கத்தில் “பெண்களை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும்” என்ற வாசகத்தை தணிக்கை குழுவினர் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும் என்று தாதா 87 படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு மூன் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் திரு இயக்கத்தில் உருவான “மோதி விளையாடு பாப்பா” எனும் குறும்படத்தில் நடித்திருந்தார். இப்படம் குழந்தைகளிடையே பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக எடுக்க்ப்பட்டிருந்தது. இந்த குறும்படத்தை எடுத்த படக்குழுவினரை தாதா 87 படக்குழு வெகுவாக பாராட்டினர்.

தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை சித்தரிக்கும் பாடலை உருவாக்கியுள்ளார். இப்பாடலை அவரே இசையமைத்து இயக்கியுள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை முன்னிருத்தும் பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு தாதா 87 படக்குழு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

Previous article‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் J.S.B.சதிஷ் தயாரிக்கும் படம் “அசுரகுரு”
Next articleஅக்ஷய் குமாரின் முதல் கன்னி தமிழ் பேச்சு